கடலூர் - மயிலாடுதுறை & மயிலாடுதுறை - திருவாரூர் இடையே நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி - ஜனவரி மாதத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வுhttps://www.photojoiner.net/image/AKZruTpQ

114 கிலோமீட்டர் தடம் - கடலூர் துறைமுகம் சந்திப்பு - மயிலாடுதுறை சந்திப்பு - திருவாரூர் சந்திப்பு

திருச்சி – காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தஞ்சை - திருச்சி இடையே மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்று போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதே சமயம் தஞ்சாவூர் - விழுப்புரம் அகல ரயில் பாதையை, 250 கோடி ரூபாயில் மின் மயமாக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, விழுப்புரம் கடலூர் இடையே பணிகள் நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து, கடலூர் - மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் தடத்தில் மின்மயமாக்கல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தடத்தில் வருகின்ற ஜனவரி மாதம் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளதாகவும். அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தெற்கு ரயில்வே மேலாளர் திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து எஞ்சியுள்ள மயிலாடுதுறை -கும்பகோணம் - தஞ்சாவூர் தடத்தில் மின்மயமாக்கல் பணி விரைவில் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை