சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல செங்கோட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கைImage result for sabarimala special train"
வரும் காா்த்திகை, மாா்கழி மற்றும் தை மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவார்கள். தற்போது செங்கோட்டை வழியாக சென்னையிருந்து கொல்லம் வரை ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இரு மார்க்கத்திலும் இந்த ரயில் பக்தா்களுக்கு போதுமானதாக இருக்காது. எனவே சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சேலம், நாமக்கல், கரூர், மதுரை, செங்கோட்டை மற்றும் சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதா ரயில், இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இயக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் நலனுக்காக உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது தொடர்பாக ரயில் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "சபரிமலை சீசனை முன்னிட்டு வழக்கம் போல பாலக்காடு வழியாக மட்டும் சிறப்பு ரயில்களை இயக்காமல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் பயனடையும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

புதியது பழையவை