பெங்களூர் - எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் 'லால்பாக்' ரயில்களின் நேரம் மாற்றம் - தென் மேற்கு ரயில்வே


பெங்களூர் - எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் 'லால்பாக்' ரயில்களின் நேரம் மாற்றம் - தென் மேற்கு ரயில்வே

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் எர்னாகுளத்திற்கு தமிழகத்தின் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை வழியாக தினமும் காலை நேரத்தில் இன்டெர்சிட்டி ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரயிலின் அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுயிருப்பதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி 12677 பெங்களூர் - எர்ணாகுளம் இன்டெர்சிட்டி விரைவு ரயில், நவம்பர் 15ம் தேதி முதல் காலை 6:10க்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும் பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு காலை 6:20க்கு வந்து 6:22க்கு புறப்படும்.

அதே போல, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு தினமும் காலை நேரத்தில் இன்டெர்சிட்டி ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரயிலின் அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுயிருப்பதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி 12608 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் 'லால்பாக்' விரைவு ரயில், நவம்பர் 15ம் தேதி முதல் காலை 6:20க்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு காலை 6:30க்கு வந்து 6:32க்கு புறப்படும், கே.ஆர் புரத்திற்கு 6:42க்கு வந்து 6:43க்கு புறப்படும்.

புதியது பழையவை