கடம்பூர் - தட்டப்பாறை மற்றும் கங்கைகொண்டான் - மணியாச்சி இரட்டை பாதை திட்டம் - வருகின்ற பிப்ரவரி மாதம் பாதுகாப்பு ஆணையர் ஆய்வுimage

மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு (160 கிலோமீட்டர்) ரூ.1,182.38 கோடி மதிப்பீட்டிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு (102 கி.மீ.) ரூ.1003.94 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு (86.56 கி.மீ.) ரூ.1,431.90 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.3,618.22 கோடி மதிப்பீட்டில் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரெயில் பாதை அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்தது.

இந்த இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவில் ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் கடம்பூர் - தட்டப்பாறை மற்றும் கங்கைகொண்டான் - மணியாச்சி இடையே அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது ரயில் பாதையை வருகின்ற 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய தயார் செய்யும்படி தெற்கு ரயில்வே மேலாளர் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


image-1

இந்நிலையில் இன்று(நவ 4) மணியாச்சி - தட்டப்பாறை இடையே இன்ஜின் மூலம் சோதனை நடைபெற்றது.