முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் பயணிகள் மற்றும் குறைந்த செலவில் செல்ல முன்பதிவில்லா டிக்கெட்டுகளை பெற்று ரயில் பயணிகள் பயணிக்கின்றனர். இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு பல முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை ஒன்றில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே துறை முன்பதிவில்லா டிக்கெட்டுகளை செயலி மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, உங்களின் அலைபேசி எண், பாலினம், நீங்கள் பிறந்த ஆண்டு உள்ளிட்டவற்றை ஆப்பில் பதிவு செய்து கொள்ளவும். அதில் இருக்கும் `புக் டிக்கெட்' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, நீங்கள் புறப்படும் ரயில் நிலையத்தையும், சென்றடைய வேண்டிய ரயில் நிலையத்தையும் குறிப்பிட்டால் அதற்கான தொகையைக் காண்பிக்கும். அதன் பின் 'பேமெண்ட் டைப்' என்ற ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்களின் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் பயன்படுத்தி கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம் .

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எனில் `RWALLET' ஆப்ஷனைப் பயன்படுத்தி மொத்தமாகக் குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ளலாம். அதன் பின் ஒவ்வொரு முறை டிக்கெட் புக் செய்யும் போதும் நீங்கள் ஏற்கெனவே ரீசார்ஜ் செய்த தொகையிலிருந்து டிக்கெட்டிற்கான கட்டணம் கழிந்து கொண்டே வரும். கட்டணத்தைச் செலுத்திய பின் `BOOK TICKET' என்பதை க்ளிக் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும்.


செயலியில் உள்ள வசதிகள்

Book & Travel - இந்த வகை டிக்கெட்டுகளை ரயில் நிலையத்திற்குள்ளிருந்து புக் செய்ய முடியாது. தண்டவாளத்திலிருந்து, குறைந்தபட்சம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால்தான் இதில் டிக்கெட் புக் செய்ய முடியும். டிக்கெட் புக் செய்த பின் அதில் இருக்கும் 'SHOW BOOKED TICKET ' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால் நீங்கள் புக்செய்த டிக்கெட்டை உங்களால் பார்க்கமுடியும். பரிசோதகர் பரிசோதனை செய்யும் போது இந்த டிக்கெட்டைக் காட்டினால் போதுமானது.

Book & Print - இந்த வகை டிக்கெட்டுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். ஆனால் பயணிக்கும் முன் நீங்கள் டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதப்படும்.

Season Ticket - இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

Platform Ticket - நடைமேடை டிக்கெட்டுகளை இந்த செயலி மூலம் பெறலாம்.

நினைவில் கொள்ளவும்.

புறநகர் ரயில் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரம் மட்டுமே செல்லும். எனவே பயணிக்கும் முன் டிக்கெட் பெறவும்.

இதர டிக்கெட்டுகள் புக் செய்த மூன்று மணிநேரத்திற்கு உங்களின் பயணத்தைத் தொடங்கி விட வேண்டும்.

பயணம் செய்ய முடியாத சூழலில் டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி இந்த செயலில் உள்ளது.



செயலியை பதிவிறக்கம் செய்ய - https://play.google.com/store/apps/details?id=com.cris.utsmobile&hl=en_IN