பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.


பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தை தினமும், 3,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தும் நிலையில், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் உள்ளது. இதனையடுத்து பாலக்காடு கோட்ட நிர்வாகம் உணவகம் நடத்த டெண்டர் அறிவித்தது.
 ரயில்வே ஸ்டேஷனில் உணவகம் திறப்பு
இந்நிலையில் டெண்டர் முடிந்து, இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளுக்கு இடையே உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு, தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், டீ, காபி மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்னதாக முதலாவது நடைமேடையில் இயங்கி வந்த உணவகமும் விரைவில் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை