ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், இன்று(நவம்பர் 2) சூலுார்பேட்டை ரயில், பகுதி தூரம் மட்டுமே செல்லும்.

சென்னை, சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டைக்கு, மதியம், 2:35 மணிக்கு, ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலும், சூலுார்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு, மாலை, 5:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், இன்று இருவழியிலும், சூலுார்பேட்டை - தடா இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.புதியது பழையவை