இந்தியாவில் உள்ள மிக நீளமான ரயில் நிலைய நடைமேடைகள் குறித்த தகவல்


இந்தியாவில் உள்ள மிக நீளமான ரயில் நிலைய நடைமேடைகள் குறித்த தகவல்

பயணிகள் ரயிலில் ஏறுவதற்கும் மற்றும் இறங்குவதற்க்கும் நடைமேடையை உபயோகப் படுத்துகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் உள்ள மிகநீளமான 7 நடைமேடைகளை குறித்த தகவலை இங்கே காணலாம்.

1. கோரக்பூர் ரயில் நிலையம் - உத்தரபிரதேசம்
கோரக்பூர் ரயில் நிலையம் உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரில் அமைந்துள்ளது.
நடைமேடை நீளம் - 1,366.33 மீட்டர் அதாவது 4,483 அடி
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோரக்பூர் உலகின் மிக நீளமான இரயில்வே நடைமேடை கொண்ட ரயில் நிலையம் என பெயர் பெற்றது.

2. கொல்லம் ரயில் நிலையம் - கேரளா
கொல்லம் ரயில் நிலையம் கேரளாவின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
நடைமேடை நீளம் - 1,180.5 மீட்டர் அதாவது 3,873 அடி.
இது உலகின் இரண்டாவது மிக நீண்ட நடைமேடை கொண்ட ரயில் நிலையமும் ஆகும்.

3. கரக்பூர் ரயில் நிலையம் - மேற்கு வங்காளம்
கரக்பூர் ரயில் நிலையம் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
நடைமேடை நீளம் - 1,072.5 மீட்டர் அதாவது 3,519 அடி.
இது உலகின் மூன்றாவது மிக நீளமான ரயில் நிலைய நடைமேடை.

4. பிலாஸ்பூர் ரயில் நிலையம் - சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாவட்டம் பிலாஸ்பூரில் இந்த ரயில் நிலையம் உள்ளது.
நடைமேடை நீளம் - 802 மீட்டர் அதாவது 2,631 அடி
இந்தியாவின் 4வது மிக நீளமான நடைமேடை கொண்ட ரயில் நிலையம்

5. ஜான்சி ரயில் நிலையம் - உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் இந்த ரயில் நிலையம் உள்ளது.
நடைமேடை நீளம் - 770 மீட்டர் அதாவது 2,526 அடி
இது இந்தியாவின் 5வது மிக நீளமான ரயில் நடைமேடையை கொண்டுள்ளது.

6. சோன்பூர் ரயில் நிலையம் - பீகார்
பீகார் மாநிலம் சோன்பூரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம்.
நடைமேடை நீளம் - 738 மீட்டர் அதாவது 2,421 அடி
உலகின் 10 வது மிக நீளமான ரயில் நடைமேடையை கொண்டுள்ளது. இது இந்தியாவின் 6 வது நீளமான ரயில்நிலையம் இதுவாகும்.

7. நபாத்விப் தாம் ரயில் நிலையம் - மேற்கு வங்காளம்
நடைமேடை நீளம் - 720 மீட்டர் அதாவது 2,362 அடி
இந்தியாவில் 7வது மிக நீளமான நடைமேடையை கொண்ட ரயில் நிலையம்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு ரயில் நிலையம் கூட இதில் இடம்பெறவில்லையா ?
Image result for virudhunagar railway station"
விருதுநகர் ரயில் நிலையம் - தமிழ்நாடு
நடைமேடை நீளம் - 600 மீட்டர் அதாவது 1,969 அடி
இந்தியாவின் 8வது மிக நீளமான நடைமேடை கொண்ட ரயில் நிலையம்
இது உலகின் 18வது மிக நீளமான நடைமேடையை கொண்ட ரயில் நிலையம்.