ரெயில் டீசல் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெயில் சக்கரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பயிற்சிப் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்

வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு 373 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள் 300 பேரும், 10,12-ம் வகுப்பு படித்தவர்கள் 74 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள், முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்து கொள்ளவும். பின்னர் https://dlwactapprentice.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் நவம்பர் 21-ந் தேதியாகும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
Image result for railway jobs"
ரெயில் சக்கர தொழிற்சாலை

பெங்களூரு ஏலகங்காவில் செயல்படும் ரெயில் சக்கர தொழிற்சாலையில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 192 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், மெஷினிஸ்ட், மெக்கானிக், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஆபரேட்டர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தோச்சியுடன், பணியிடங்கள் உள்ள பிரிவில் என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், அப்ரண்டிசிப் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, www.rwf.indianrailways.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் நவம்பர் 15-ந் தேதியாகும். விரிவான விவரங்களையும் அந்த இணையதளத்தில் பார்க்கலாம்.