சேலத்தில், ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல்லை, ரயில் ஓட்டுனர் முன்கூட்டியே பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Image result for stones on rail track"
மாதிரி புகைப்படம்
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காகளின் வழியாக சேலம்-சென்னை மற்றும் சேலம்-பெங்களூர் ரயில்வே இருப்பு பாதைகள் உள்ளன. இந்த நிலையில், சேலம்-சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கல்லை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்தவழியாக வந்த ரயில் கல்லின் மீது மோதுவதற்கு முன்பாகவே இரயில் ஓட்டுனர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தி, கல்லை கீழே தள்ளிவிட்டு பின்னர் இரயிலை இயக்கிச் சென்றார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.