செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் - ரயில்வே பயணிகள் சேவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வு

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் - ரயில்வே பயணிகள் சேவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வு



செங்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள், பயணியருக்கான சேவைகள், ஓய்வு அறை, நடை மேடை உள்ளிட்ட வசதிகளை இந்திய ரயில்வே பயணிகள் சேவைக் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சின்னபாலன், எம்.என்.சுந்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரயில் நிலைய உணவகம், தங்கும் இடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ததுடன், பயணிகளிடம் அவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் "செங்கோட்டை ரயில் நிலையத்தில், பிட் லைன் வசதி, லிப்ட் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டுள்ளதாகவும், அது குறித்து அறிக்கை அனுப்பப்படும்" என்றும் கூறினர். மேலும் பயணிகள் ஓய்வறைகள், கூடுதல் டிக்கட் கவுண்டர்கள், அனைத்து நடைமேடைகளிலும் குடிநீர் மற்றும் கழிவறை வசதி, எல்லா நடைமேடைகளிலும் ரயில்களின் வருகை புறப்பாடு பற்றி அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் கூடுதலாக அமைத்தல், ரயில் பெட்டிகளை கண்டறியும் எலக்ட்ரானிக் போர்டுகள் அனைத்து நடைமேடைகளிலும் அமைத்தல் இவை குறித்தும் அறிக்கை அனுப்பப்படவுள்ளது.