வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவக்கி வைப்பு - வருவாய் அதிகரிக்க சேலம் கோட்டம் திட்டம்

வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவக்கி வைப்பு - வருவாய் அதிகரிக்க சேலம் கோட்டம் திட்டம்சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் வருவாய்யை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை சேலம் கோட்டம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அடுத்துள்ள வஞ்சிபாளையம் ரயில் நிலையத்திற்கு சங்ககிரி ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவையை சேலம் மேலாளர் சுப்பா ராவ் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது சேலம் கோட்ட மூத்த வர்த்தக அதிகாரி ஹரிகிருஷ்ணன், மூத்த ரயில் இயக்க மேலாளர் ஹரிகுமார் மற்றும் இந்திய சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

சங்ககிரி - வஞ்சிபாளையம் சரக்கு ரயில்.

சங்ககிரி - வஞ்சிபாளையம் இடையே மாதத்திற்கு 15 ரயில்கள் இயக்கவுள்ளதாகவும், இதன் மூலம் 45 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சேலம் கோட்டத்தில் 12 சரக்கு முனையங்களும், 16 தனியார் சரக்கு முனையங்களும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதத்தில் ரூ. 142.93 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை ஓப்பிடும் போது சுமார் 201% அதிகம்(கடந்த ஆண்டு வருவாய் ரூ. 47.40 கோடி). இதனை தொடர்ந்து சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு கோட்ட மேலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை