ரயில்களில் பூஜைகள் மேற்கொள்ள வேண்டாம் என, சபரிமலை பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சபரிமலை சீசன் துவங்கியதில் இருந்து ரயிலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரயில் கழிவறைகளில் பயணிகள் குளிப்பதே இதற்கு காரணம் எனவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய கற்பூரம் போன்ற பொருட்களை கொண்டு, ரயிலில் பூஜைகள் மேற்கொள்வது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.புதியது பழையவை