நாகர்கோவில் - மும்பை(4 நாட்கள்) மற்றும் திருநெல்வேலி - மும்பை தாதர்(3 நாட்கள்) விரைவு ரயில்களின் தடம் கரூர் - நாமக்கல் - சேலம் வழியாக மாற்றம் - தெற்கு ரயில்வே

நாகர்கோவில் - மும்பை - நாகர்கோவில் இடையே 16340/16339 என்ற எண்களுடனும், திருநெல்வேலி - மும்பை தாதர் - திருநெல்வேலி இடையே 11022/11021 என்ற எண்களுடன் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மதுரை - திண்டுக்கல் - கரூர் - ஈரோடு - சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.


இந்த ரயில்களை கரூர் - ஈரோடு - சேலம் தடத்திற்கு பதிலாக கரூர் - நாமக்கல் - சேலம் வழியாக இயக்க தென் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில் இந்த ரயில்களில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து மிக குறைந்த அளவிலான பயணிகள் பயணித்து வந்தது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தென் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் இந்த ரயிலின் நேரத்தை குறைக்கவும், நாமக்கல் வழியாக இயக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த ரயில்களை நாமக்கல் தடத்தில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி, 16339 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில், டிசம்பர் 1ம் தேதி முதலும், 16340 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் டிசம்பர் 2ம் தேதி புறப்படும் சேவையில் இருந்து நாமக்கல் வழியாக இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதே போல, 11021 தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில், டிசம்பர் 7ம் தேதி முதலும், 11022 திருநெல்வேலி - மும்பை விரைவு ரயில் டிசம்பர் 9ம் தேதி புறப்படும் சேவையில் இருந்து நாமக்கல் வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த ரயில்களின் அட்டவணை பின்வருமாறு


16339 மும்பை நாகர்கோவில் விரைவு ரயில்
இந்த ரயில் நாமக்கல் வழியாக ஞாயிறுபுதன்வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்
திருப்பத்தூர் 01:58 PM 02:00 PM
சேலம் 03:25 PM 03:30 PM
நாமக்கல் 04:28 PM 04:30 PM
கரூர் 05:03 PM 05:05 PM
திண்டுக்கல் 07:05 PM 07:10 PM
மதுரை 08:25 PM 08:30 PM

16340 நாகர்கோவில் மும்பை விரைவு ரயில்
இந்த ரயில் நாமக்கல் வழியாக திங்கள்செவ்வாய்புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்
மதுரை
11:00 AM
11:05 AM
திண்டுக்கல்
12:10 PM
12:15 PM
கரூர்
01:37 PM
01:40 PM
நாமக்கல்
02:13 PM
02:15 PM
சேலம்
03:15 PM
03:20 PM
திருப்பத்தூர்
04:53 PM
04:55 PM

11021 தாதர் திருநெல்வேலி விரைவு ரயில் 
இந்த ரயில் நாமக்கல் வழியாக திங்கள்வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்

சேலம்
03:10 AM
03:15 AM
நாமக்கல்
04:09 AM
04:11 AM
கரூர்
05:13 AM
05:15 AM
திண்டுக்கல்
07:00 AM
07:05 AM

11022 திருநெல்வேலி தாதர் விரைவு ரயில் 
இந்த ரயில் நாமக்கல் வழியாக திங்கள்வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்

திண்டுக்கல்
07:00 PM
07:05 PM
கரூர்
08:18 PM
08:20 PM
நாமக்கல்
08:53 PM
08:55 PM
சேலம்
09:45 PM
09:50 PM