மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம்


மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம்திருச்சியில் காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில் நவம்பர் 19, 20, 21, 22, 26, 27, 28, 29ம் தேதிகளில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக காலை 10:30க்கு புறப்படும்.


காரைக்குடியில் காலை 9:50க்கு புறப்படும், 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் நவம்பர் 19, 20, 21, 22, 26, 27, 28, 29ம் தேதிகளில் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக காலை 10:45க்கு புறப்படும்.

நாகர்கோவிலில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில் நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.(நவம்பர் 21, 28ம் தேதி தவிர)

கோவையில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.(நவம்பர் 21, 28ம் தேதி தவிர)

செங்கோட்டையில் பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.(நவம்பர் 21, 28ம் தேதி தவிர)

மதுரையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மதுரை - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.(நவம்பர் 21, 28ம் தேதி தவிர)

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16127) வள்ளியூர், நாகர்கோவில் ரெயில் நிலையங்களுக்கு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும். இதையடுத்து, சென்னை-தூத்துக்குடி இணைப்பு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16129) மேற்கண்ட நாட்களில் இரவு 10 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில்கள் வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் மட்டும் வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும். 

https://www.photojoiner.net/image/sXN1mlTc
புதியது பழையவை