நாகர்கோவில் - மும்பை விரைவு ரயிலுக்கு நவீன வசதி கொண்ட பெட்டிகள் - நவம்பர் 22ம் தேதி முதல் அறிமுகம்


நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு மதுரை, கரூர், ஈரோடு, சேலம், பெங்களூர் கே.ஆர் புரம் வழியாக வாரத்தில் 4 நாட்களும், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருத்தணி வழியாக வாரத்தில் இரண்டு நாட்களும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் - மும்பை(மதுரை, சேலம்), நாகர்கோவில் - மும்பை(மதுரை, திருச்சி, விழுப்புரம்) மற்றும் கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில்களுக்கு அதிநவீன எல்.எச்.பி பெட்டிகள் மூலம் இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.

Image result for lhb rake"

அதன்படி நாகர்கோவிலில் நாளை(நவ 22) காலை 6மணிக்கு புறப்படும், 16340 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளது. மருமார்கத்தில் 16339 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் நவம்பர் 24ம் தேதி முதல் எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, 12666 கன்னியாகுமரி - ஹௌரா ரயில் டிசம்பர் 7ம் தேதி முதலும், 12665 ஹௌரா - கன்னியாகுமரி விரைவு ரயில் டிசம்பர் 9ம் தேதி முதலும் எல்.எச்.பி பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. அதே போல 16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், டிசம்பர் 12ம் தேதி முதலும், 16351 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் டிசம்பர் 14ம் தேதி முதலும் எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளது.

எல்.எச்.பி வசதிகள்
  • ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்.எச்.பி., பெட்டிகளின் எடை 52 டன்னிற்கும் குறைவானது என்பதால் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் உள்ளதால் பெட்டிகள் எளிதில் தீ பிடிக்காது.  விபத்து ஏற்படும் போது பெட்டிகள் கவிழாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • குறைந்த சத்தம் எழுப்பக்கூடியது என்பதால் பயணிகள் அமைதியான சூழலில் பயணிக்க முடியும்.
  • நீல நிறத்தில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை விட, இந்த பெட்டிகள் நீடித்த உழைக்க கூடியதாகும்.
  • கம்ப்யூட்டர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
  • நவீன வாஷ்பே‌ஷன்கள், கழிவறைகள் உள்ளன.
  • படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் கூடுதலாக 8 பெர்த் என மொத்தம் 80 படுக்கைகள் இடம்பெற்று உள்ளது.
  • தெற்கில் குறைந்த அளவில் எல்.எச்.பி பெட்டிகள் ஒதுக்கீடு

இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிகம் நடைபெற்று வரும் சூழலில், இது போன்ற அதிநவீன பெட்டிகளின் அறிமுகம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன என்கிற போதிலும், வடஇந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் இந்த நவீன மாற்றம் மிக மெதுவாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

பயணிகள் எதிர்பார்ப்பு

இந்த ரயிலின் நேரத்தை மாற்றி தினசரி இயக்கவும், கரூர் - ஈரோடு - சேலம் தடத்திற்கு பதிலாக கரூர் - நாமக்கல் - சேலம் வழியாக இயக்கவும் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்பதிவில்ல பெட்டிகள் குறைப்பு

மேற்கொண்ட ரயில்களில் இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் நான்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பத்தும் இணைக்கப்படவுள்ளது. மேலும் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்படும். தற்போது மேற்கொண்ட ரயில்களில் நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


புதியது பழையவை