திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மாற்றம் - மதுரைக் ரயில்வே கோட்டம்


Image result for 16128"

குருவாயூா் ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 25, 28, 29, 30 ஆகிய தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.16128 குருவாயூா்- சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

இதன் காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 26, 29, 30 மற்றும் டிசம்பா் 1 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.16130 தூத்துக்குடி- சென்னை எழும்பூா் இணைப்பு ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 8.20 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் எனத் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதியது பழையவை