பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு பகுதி தூரம் மட்டுமே செல்லும் - ரயில்வே நிர்வாகம்.

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 11.25, 11.45 மணி, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11, 11.20, 11.40, 11.59 மணி, தாம்பரம் - கடற்கரை இடையே இரவு 10.25, 10.45, 11.25, 11.45 மணி, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற 9ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை - செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 4.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை - தாம்பரம் இடையே வரும் 10ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் இடையே அதிகாலை 4.15 மணி, தாம்பரம் - கடற்கரை இடையே 3.55, 4.15, 4.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 10ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது
புதியது பழையவை