அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், சித்தேரி-மகேந்திரவாடிக்கு இடையேயும், சேவூர்-காட்பாடி இடையேயும் பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள்கிழமை (நவ.4) மாற்றம் - தெற்கு ரயில்வே

Image result for arakonam rail maintenence"

முழுமையாக ரத்து

அரக்கோணம்-வேலூர் கண்டோன்மென்ட் இடையே திங்கள்கிழமை மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட்-அரக்கோணம் இடையே திங்கள்கிழமை காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

நின்று செல்லும்

ஹௌரா சந்திப்பு-யஸ்வந்த்பூர் இடையே திங்கள்கிழமை காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் சித்தேரி-மகேந்திரவாடி இடையே 75 நிமிஷங்கள் நின்று செல்லும்.

கோயம்புத்தூர் சந்திப்பு-சென்னை சென்ட்ரல் இடையே திங்கள்கிழமை காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் மகேந்திரவாடியில் 10 நிமிஷங்கள் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல்-மங்களூர் இடையே நண்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மேற்குகடற்கரை விரைவு ரயில் சித்தேரியில் 50 நிமிஷங்கள் நின்று செல்லும்.
புதியது பழையவை