திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயிலின் நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும். மார்ச் முதல் கூடுதல் விரைவு ரயில்கள் - ரயில்வே அதிகாரி தகவல்Image result for pattukottai railway station"

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் திருச்சியில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயண நேரம் 6½ மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை விரைவில் நியமித்து ரெயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இதனை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார், "திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ரெயில்வே கேட்டுகளுக்கு ஆட்களை நியமித்து பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரெயில் போக்குவரத்து துவங்கவும். அடுத்த மாதம்(டிசம்பர்) 10-ந் தேதிக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடையே புதிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.