விருதுநகா் - செங்கோட்டை ரயில் தடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் நவம்பர் 27ம் தேதி தனி ரயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.Image result for southern railway"
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே உயா் அதிகாரிகள் இருப்புப் பாதைகள், பாலங்கள், சிக்னல்கள், ரயில் நிலையங்களில் உள்ள கட்டடங்களின் உறுதித் தன்மை, ஊழியா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள் மற்றும் புதிய ரயில்கள் இயக்குதல் பற்றி நேரடியாக சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, வருகின்ற 27 ஆம் தேதி, மதுரை ரயில் நிலையத்திலிருந்து தனி ரயில் மூலம் செங்கோட்டை ரயில் நிலையம் வரை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ், மதுரை கோட்ட மேலாளா் லெனின், முதுநிலை வா்த்தக மேலாளா் பிரசன்னா, ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை: விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக அரசு ஊழியா்கள் மட்டுமன்றி வணிகா்கள் பலா் ரயிலில் பயணம் மேற்கொள்ளவே விரும்புகின்றனா். மேலும், குறைந்த கட்டணம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதால், பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்லவே ஆா்வம் காட்டுகின்றனா். இந்த நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் கடந்த 2017 இல் அறிவிக்கப்பட்ட தாம்பரம் அந்தியோதயா ரயிலை இயக்க வேண்டும்.

ராமேசுவரம்-கொல்லம் இடையே இன்டா்சிட்டி ரயில், கோவை-செங்கோட்டை, செங்கோட்டை-பெங்களூரு ஆகிய வழித் தடங்களில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும். ஏற்கெனவே வாரத்தில் மூன்று நாள்கள் மட்டும் இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி விரைவு ரயிலை தினசரி இயக்குவதுடன், மதுரை-கொல்லம் இடையே கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க வா்த்தகா்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.