திருநெல்வேலி - தென்காசி/செங்கோட்டை ரயில் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.கடையநல்லூர் – தென்காசி/செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56796 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56797 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56731 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56733 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56736 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே மற்றும் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56801 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56800 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள ரயில்
செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் மதியம் 02.40 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56728 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் மாலை 03.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். (70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்).

புதியது பழையவை