வடமேற்கு ரயில்வேயில் 2029 காலியிடங்களுக்குவிண்ணப்பிக்க அழைப்பு

இந்திய அரசின் வடமேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 2029 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Trade Apprentices
மொத்த காலியிடங்கள்: 2029
வயதுவரம்பு: 08.12.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஐடிஐ தொழிற்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcjaipur.in  அல்லது //www.rrcjaipur.in/Upload/News-Events/Act app 2019-20.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2019