ஈரோடு - கரூர் தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 19ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.


ஈரோட்டில் காலை 7:50க்கு புறப்படும், 56110 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் முழுமையாக ரத்து.

திருச்சியில் காலை 6:50க்கு புறப்படும், 56841 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் கரூர் - ஈரோடு இடையே ரத்து.

ஈரோட்டில் மதியம் 2:50க்கு புறப்படும், 56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் ஈரோடு - கரூர் இடையே ரத்து.

கோவையில் காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் ஈரோடு - சேலம் - நாமக்கல் - கரூர் தடத்தில் இயக்கம்.

பாலக்காடு டவுனில் காலை 6:25க்கு புறப்படும், 56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் ஈரோடு - சேலம் - நாமக்கல் - கரூர் தடத்தில் இயக்கம்.

திருநெல்வேலியில் காலை 5:05க்கு புறப்படும், 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் கரூர் - ஈரோடு இடையே ரத்து.

ஈரோட்டில் மாலை 4மணிக்கு புறப்படும், 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் ஈரோடு - சேலம் இடையே ரத்து.

16340 நாகர்கோவில் மும்பை விரைவு ரயில் கரூர் ரயில் நிலையத்தில் 75 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், கரூர் ரயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


புதியது பழையவை