தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், நவம்பா் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே

Image result for emu chennai

நவம்பர் 11ம் தேதி
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
நவ.12 முதல் 15ம் தேதி வரை
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுபோல, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
புதியது பழையவை