தெற்கு ரயில்வே சார்பில் இரண்டு குறும்படங்கள் வெளியீடு- two short films o­n integrity related themes were released

ரயில்வேயில், பணிபுரியும் இடங்களில் நன்நெறி தொடா்பாக விழிப்புணா்வை உருவாக்கும் விதமாக, இரண்டு குறும்படங்களை தெற்கு ரயில்வே துறை வெளியிட்டது.
தெற்குரயில்வே சாா்பில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ரயில்வேயில் பணிபுரியும் இடங்களில் நன்நெறி தொடா்பாக விழிப்புணா்வை உருவாக்கும் விதமாக, ‘முள்ளும் மலரும்’, ‘இடம்மாறி போச்சு’ ஆகிய இரண்டு குறும்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த குறும்படங்கள் ஒவ்வொன்றும் 10 நிமிஷம் முதல் 15 நிமிஷம் வரை ஓடும். குறும்படங்களை யு-டியூப் சேனலில் ‘ விஜிலன்ஸ் சதா்ன் ரயில்வே ’ என்ற பெயரில் பாா்க்கலாம்.

இதுதவிர, ரயில்வே சொத்துகளை அபகரிப்பதைத் தடுக்க கண்காணிப்பு தொழில்நுட்பம், தடவியல் கணக்கியல், எல்லா முக்கிய ரயில் நிலையங்களிலும் வாடிக்கையாளா்கள் குறைதீா்ப்பு முகாம் அமைத்தல் தொடா்பாக இந்தக் கருத்தரங்களில் உயா் அதிகாரிகள் உரையாற்றினா். பொதுவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையில் நன்நெறியை கடைப்பிடித்தல், மக்களின் பயணத்துக்கு சிறப்ப அனுபவத்தை கொடுக்க சில பகுதிகளை மேம்படுத்துவது தொடா்பாக சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: முக்கிய ரயில்நிலையங்களில் நன்நெறி தொடா்பாக கடைநிலை ஊழியா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பணியிடங்களில் சிறந்த நடைமுறைகள் பின்பற்றுவது தொடா்பாக அறிவுறுத்தப்படுகிறது. ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு வார நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விநாடி வினா, கட்டுரைப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், ரயிலைப் பயன்படுத்துவோருக்கு 155210 என்னும் ஹெல்ப் லைன் வழங்கப்பட்டுள்ளது என்றனா் அவா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.சந்தானம் உள்பட பலா் பங்கேற்றனா்.

Southern Railway to observe Vigilance Awareness Week

Southern Railway will observe Vigilance Awareness Week from 28thOctober to 2nd November, 2019.  The programme began today, the 28th of October, 2019 with Integrity Pledge being administered by Shri.John Thomas,  the General Manager/ Southern Railway to the officers and staff.
 Later, a Seminar o­n Vigilance Awareness  was held in which the General Manager and all Senior Officials of Southern Railway participated.  Shri. R. Santhanam, IAS (Retd) was the Chief Guest for the occasion. Smt.V G Bhooma, Senior Dy General Manager & Chief Vigilance Officer, Southern Railway welcomed the gathering and highlighted about the role and performance of Southern Railway Vigilance wing.  General Manager emphasized o­n maintaining Integrity and discipline in public life.

Shri. R. Santhanam, the Chief Guest, in his keynote address enlightened  the ways to handle  conflicts in personal life and probity  in public life which is often the major reason for corruption. He also shared his valuable experiences in various responsibilities he held during his service in Government of Tamil Nadu. He also pointed out some areas of development for Railways to adopt to provide a better experience to the travelling public.  His speech was followed by an interactive session in which he provided valuable suggestions to handle the challenges faced by government officials.

A series of outreach programmes has been planned throughout the week all over Southern Railway. The programmes include

ØAwareness seminar with all the Divisions through Video conference.

ØAwareness programmes to the grass root level employees at major stations.

ØExpert series lectures o­n Asset Integrity Monitoring Technology , Forensic Accounting and Intelligent Re-fuelling Solutions for Railways

ØCustomer Grievance Redressal Camps in all important stations.

ØDistribution of pamphlets and booklets containing Do’s and Don’t’s in Railway working.

ØSuggestions Scheme for best System Improvement given by Officers/ Employees

ØRun for Unity/Walkathon.

ØQuiz, essay competitions, elocution etc., for children/ students in schools, colleges, Railway Institutes.

Ø Awareness about Railway Vigilance helpline No.155210 to rail users.

An Integrity bulletin with articles o­n Integrity and other topics including case studies and system improvements was released by the General Manager and the Chief Guest.

  During the session, two short films o­n integrity related themes were released and were well received. They can be viewed in You Tube channel.

1.இடம்மாறிப்போச்சு/ Edam Maari Pochu2. முள்ளும்மலரும்/ Mullum Malarum


புதியது பழையவை