கடந்த ஜூன் 1ம் தேதி திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி தடத்தில் அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து துவங்கியதும், மீண்டும் பல ரயில்கள் இயக்கப்படும், குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என எண்ணிய பொது மக்களின் கனவு இன்று வரை பலிக்கவில்லை.

காரணம் என்ன ?

இந்த திருவாரூர் - காரைக்குடி தடத்தில் 72 கடவு பாதைகள் உள்ளது, இதில் பணியாட்களை ரயில்வே நிர்வாகம் நியமிக்கவில்லை. இதன் காரணமாக தற்போது இயங்கும் சிறப்பு பயணிகள் ரயிலில் கடவு பாதையை பூட்டு திறக்க பணியாட்கள் பயணிக்கின்றனர். இதனால் ரயில் கடவு பாதை முன்பும், கடவு பாதையை தாண்டியும் நிறுத்தப்படுகிறது. இதனால் ரயிலின் பயண நேரம் அதிகமாக உள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுவது என்ன ?

கடவு பாதை என்று மட்டும் இல்லை, இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில் ஓட்டுனர்கள், தடத்தை கண்காணிக்க ற்றச்க் மேன்கள் என பல பணியாளர்கள் தேவை படுகின்றனர். வாரியம் தான் அந்த பணிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

ரயில்களின் எதிர்பார்ப்பு ஏராளம் !

  • சென்னை - ராமேஸ்வரம் பகல் நேர தினசரி சேவை. அப்துல் காலம் அவர்களின் நீண்ட நாள் கனவு சென்னைக்கு பகல் நேர சேவை வேண்டும் என்பது. அதனை நிறைவேற்றுமா ரயில்வே துறை.
  • செங்கல்பட்டு - காரைக்குடி தினசரி பயணிகள் அல்லது முன்பதிவில்லா விரைவு ரயில்.
  • திருத்துறைப்பூண்டி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்.
  • காரைக்குடி - சென்னை இரவு நேர தினசரி ரயில்.
  • ராமேஸ்வரம் - ஷீரடி வாராந்திர சேவை.
  • ராமேஸ்வரம் - ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர விரைவு ரயில்.
  • கன்னியாகுமரி - கொல்கத்தா வாராந்திர ரயில்.
  • ராமேஸ்வரம் - புது டெல்லி வாராந்திர சேவை இதுவும் அப்துல் காலம் அவர்களின் நீண்ட நாள் கனவு. இந்த ரயிலுக்கு அப்துல் கலாம் விரைவு ரயில் என்று பெயர் சூட்டலாம்.


இப்படி எதிர்பார்ப்புகள் ஏராளம் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமா ரயில்வே துறை !

#RestoreTrains #TvrTtpPktKkdi