பொள்ளாச்சி - கோவை நகரங்களை இணைக்கும் பொள்ளாச்சி -- போத்தனுார் ரயில்பாதை, மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த போது, கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது.பொள்ளாச்சியில் இருந்து, 12வது கி.மீ.,ல் இருந்த இந்த ஸ்டேஷன், பயணிகள் எண்ணிக்கை குறைவு என்ற காரணத்தால் மூடப்பட்டது.கடந்த, 2009ம் ஆண்டில் ரயில் வழித்தடம், 340 கோடி ரூபாய் செலவில் அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்டது.

அப்போது, கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் வெறும், 20 - 30 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் முதலமடையில், ரயில்வே ஸ்டேஷனை அமைத்து, ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை பாலக்காடு கோட்ட அதிகாரிகள் வெளிச்சம் போட்டு காட்டினர்.மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் அமைத்தால், குறைந்த கட்டணம், பாதுகாப்பு, நெரிசல் தவிர்ப்பு உள்ளிட்ட நன்மைகளுக்காக ரயில் சேவையை பயன்படுத்துவர்.

இதனால், ரயில்வே நிர்வாகத்துக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.இந்நிலையில், இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில், கோவில்பாளையத்தை சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 'மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினால், அது அரசின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.எட்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அன்று இருந்த அரசியல் சூழல், மத்திய, மாநில அரசுகள் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது.இன்று, ரயில்வே வருவாயை அதிகரிக்கவும், மக்களுக்கு ரயில் சேவையை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில், மாநில அரசு மூலம் மத்திய அரசு, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்தை ஈர்க்க, கிராம இளைஞர்கள் ஒன்றுபட்டு, இன்று நடக்கும் கிராம சபையில் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் ரயில்வே ஆர்வலர்கள்.


Image result for dinamalar