ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் மேம்பாடு பணிகள் விரைவில் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் ரயில் நிலையத்தில் தாழ்வாக உள்ள நடைமேடை உயர்த்துதல், நடைமேம்பாலம் கட்டுதல் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குள்ள நடைமேடை மிகவும் தாழ்வாக இருப்பதால், பயணிகள் ஏறி, இறங்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நடைமேம்பாலம் இல்லாததால் தண்டவாளத்தை கடக்க தவிக்கின்றனர். அதே சமயம் போதிய நிழற்குடை இல்லாததால், மழைநேரங்களில் பயணிகள் நனைகின்றனர். போதிய வாகன நிறுத்துமிடம் வசதியில்லாததால், பயணிகள் வருகை குறைவது உட்பட பல்வேறு சிரமங்கள் உள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் கோரி வந்தனர். 

இதனையடுத்து நடைமேடை உயர்த்துதல், நடைமேம்பாலம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2020 ஜனவரியில், வளர்ச்சிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை