மேட்டுப்பாளையம் ரயில் நிலைய சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை - சீரமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

ISO தரச்சான்றிதழ் பெற்ற மேட்டுப்பாளையம் ரயில் நிலைய சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு
நீலகிரி மலை ரயிலில் செல்வதற்காக வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தான் மாலை 7 மணிக்கு மேல் சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி சென்று கொண்டிருக்கிறது அதேபோல் கோவை - மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் தினசரி சென்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து போகும் ரயில் நிலையத்திற்கு முன் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ள காரணத்தினால் போதிய மின்விளக்கு இல்லாதால் வெளிச்சம் இல்லாமலும் சிறு மழை என்றாலே சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கீழே உள்ள வழிக்கு விழும் அபாயம் உள்ளது. வெளியூர் செல்வதற்காக புறப்பட்டு செல்லும் பயணிகளின் துணிமணி மற்றும் உடமைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது ஆகவே தற்போது மழைக்காலம் என்பதால் மேற்கண்ட சாலையை சீரமைத்து போர்க்கால அடிப்படையில் தருமாறு பயணிகள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை