''தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் அமைக்கப்பட்டு வரும், மூன்றாவது ரயில் பாதை, 2020 மார்ச்சில் செயல்பாட்டிற்கு வரும்,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தீபாவளி முன்பதிவை பொறுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 25 லிட்டர்சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னை, வில்லிவாக்கம் வரை, தலா, ஒரு ரயில் சேவையில், 25 லிட்டர் என, 141 முறை, தண்ணீர் எடுத்து வரப்பட்டுள்ளது.செங்கல்பட்டு - தாம்பரம் இடையில், கூடுதலாக புறநகர் ரயில்களை இயக்க, மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.இது, 2020 மார்ச்சில் செயல்பாட்டிற்கு வரும். புதிய வழித்தடங்களில், ரயில்களை இயக்கவே, தனியாருக்கு அனுமதி அளிப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேம்படும்
ஏற்கனவே உள்ள ரயில்களை இயக்க, தனியாருக்கு அனுமதி வழங்கப்படாது. இதனால், ரயில் சேவை மேம்படும். சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில், நடை மேம்பாலம் அமைக்கும் பணி, விரைவில் துவங்கும்.பயணியர் பாதுகாப்புக்காக, தற்போது, 25 ரயில் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில், தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, 573 நிலையங்களிலும் பொருத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.