ரயில்வே வாரிய அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க திட்டம்


ரயில்வே வாரியத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையாக, அதிலுள்ள இயக்குநர் மற்றும் அதற்கு மேலான தகுதியில் இருக்கும் அதிகாரிகளை மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே அலுவலகங்களின் செயல்திறனை மேம்படுத்த இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக ரயில்வே வட் டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அந்த வட்டா ரங்கள் மேலும் கூறியதாவது:

ரயில்வே வாரியத்தில் தற்போது 200 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 150ஆக குறைக்கப்படும். இயக்குநர் மற்றும் அதற்கு மேலான தகுதியில் இருக்கும் எஞ்சிய அதிகாரிகள் 50 பேர் மண்டல அலுவலகங்களுக்கு மாற்றப்படுவர். ரயில்வே வாரியத்தில் ஒரே மாதிரி யான பணியை பலர் செய்து கொண் டிருப்பதாலும், மண்டல அலுவல கங்களின் செயல்திறனை மேம்படுத்த அங்கு உயரதிகாரிகளின் தேவை இருப்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நீண்டகால மாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த இத்திட்டம், விரைவில் அமல்படுத்தப் படும்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோய லின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில்வே வாரி யத்தின் தற்போதைய தலைவர் வி.கே. யாதவ் இந்த விஷயத்துக்கு முன்னு ரிமை அளித்து வருகிறார்.

ரயில்வே வாரியம் உள்பட, இந்திய ரயில்வேயில் ஊழியர்களின் எண் ணிக்கை தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இது ரயில்வேயின் செயல் திறனை முற்றிலும் பாதிக்கிறது. ரயில் வேக்கு உண்மையில் தேவைப்படும் ஊழியர்களின் துல்லியமான எண் ணிக்கையை அறிய இதுவரை எந்த வொரு தீவிர நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதில்லை. அதை அறிந் தால் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், நிதியை சிக்கன மாக பயன்படுத்த இயலும். ரயில்வே துறையின் அளவை மிகச் சரியாக மாற்றுவதற்கான அரசியல் ரீதியி லான துணிச்சல் இல்லாததாலேயே முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில்லை.

ரயில்வே துறையை முறைப்படுத்து வதின் முதல் நடவடிக்கையாகவே, ரயில்வே வாரியத்தின் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை ரயில்வே அமைச்சகம் மேற்கொண் டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில், ரயில்வே ஊழியர் களின் எண்ணிக்கையை ஆய்வு செய் யுமாறு சமீபத்தில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், வாரிய உறுப் பினர்கள், மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அலுவலக உதவியாளர் களை தேவையான எண்ணிக்கையில் மட்டுமே பணியில் ஈடுபடுத்துமாறு கூறியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் முடிவுகளை மேற்கொள்ளும் முக்கிய அமைப்பான ரயில்வே வாரியத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதென முதன்முதலில் கடந்த 2000ஆம் ஆண்டு வாஜ்பாயின் அரசின்போது திட்டமிடப்பட்டது. ரயில்வே வாரி யத்தை மறுகட்டமைப்பு செய்வதற் காக கடந்த 2015ஆம் ஆண்டில் இந் திய ரயில்வேக்கான விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைத்தது.

இந்திய ரயில் வேயின் அதிகார மையப்படுத்தப் பட்ட கட்டமைப்பும், ஒவ்வொரு துறைகளிலும் தனி குழுக்களாகச் செயல்படும் தன்மையும் ரயில்வேயின் பணிக் கலாசாரத்தை பாதிப்பதாகவும், துறை ரீதியான இலக்குகளை நோக்கிய செயல் பாட்டை மட்டுப்படுத்துவதாகவும் அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
logo