கோவை பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கலுக்கு முன்னோட்டமாக, அளவீட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


கோவை - பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கலுக்கு முன்னோட்டமாக, அளவீட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், எதிர்காலத்தில் பொள்ளாச்சி வழித்தடம் அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவையை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு (கோர்), கடந்தாண்டு ஆண்டில் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்ட, 1,166 கி.மீ., ரயில் வழித்தடங்களை 9 திட்டங்களாக மின்மயமாக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.