கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க வலியுறுத்தி, போராட்டக்குழுவினர் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணி காரணமாக, கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணி நிறைவடைந்தும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், மீண்டும் இயக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்து வது தொடர்பாக கோவையில் ரயில்வே போராட்டக்குழு சார்பில், கோவை ரயில் நிலையத்தில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. கோவை எம்.பி., நடராஜன், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., கார்த்திக் கையெழுத்திட்டனர். மேலும் ரயில் பயணிகளிடமும் கையெழுத்து பெறப்பட்டது.