56624 மதுரை - பழனி பயணிகள் ரயில், அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக மதுரையில் இருந்து பழனிக்கு காலை 6:30க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் பழனிக்கு காலை 10மணிக்கு வந்து சேரும்.

திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் வருகின்ற அக்டோபர் 4, 10 மற்றும் 11ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் அக்டோபர் 4 மற்றும் 11ம் தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 4:05க்கு பதிலாக 6மணிக்கு புறப்படும்.

பாலக்காட்டில் இருந்து காலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வருகின்ற அக்டோபர் 4, 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் வருகின்ற அக்டோபர் 5. 9 மற்றும் 12ம் தேதிகளில் திருநெல்வேலி - விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காட்டில் இருந்து காலை 4:10க்கு புறப்படும், 56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வருகின்ற அக்டோபர் 5. 9 மற்றும் 12ம் தேதிகளில் விருதுநகர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், வருகின்ற அக்டோபர் 4, 5, 9, 11, 12ம் தேதிகளில் கோவில்பட்டி - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், வருகின்ற அக்டோபர் 4, 5, 9, 11, 12ம் தேதிகளில் திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.



வாட்ஸாப்பில் தமிழக ரயில் செய்திகளை பெற +916385195419 இந்த எண்ணை உங்கள் அலைபேசியில் சேமித்து. பிறகு ஒரு புதிய குழுவை உருவாக்கி அதில் அந்த எண்ணை சேர்க்கவும்.(அந்த புதிய குழுவில் நீங்களும், இந்த எண்ணும் இருக்கும் - வேண்டுமானால் மற்றவர்களை குழுவில் இணைந்து கொள்ளலாம்)

அல்லது தற்போது உங்களிடம் இருக்கும் வாட்ஸாப்ப் குரூப்பில் +916385195419 இந்த எண்ணை சேர்க்கவும்