தாம்பரம் - செங்கல்பட்டு அகல ரயில் பாதையில், சிக்னல் இணைப்பு பணி, 6.53 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.


https://www.photojoiner.net/image/7w2xtcXx

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது அகல ரயில் பாதை பணி நடக்கிறது. இப்பாதைக்கு சிக்னல் கேபிள் அமைப்பதற்கான, ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்திலும், வெளிப்பகுதியிலும், சிக்னல்கள் அமைக்கும் பணி, 6.53 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.இது குறித்து, மூன்றாவது பாதை சிக்னல் பிரிவு அதிகாரி கூறியதாவது:தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதையில் உள்ள நிலையங்களில், புதிய நடைமேடைகளில், மின் இணைப்பு மற்றும் சிக்னல்கள் அமைப்பதற்கான ஆரம்ப பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில் இடையே பணிகள் நடக்கின்றன.இத்திட்டத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில், மூன்றாவது பாதை இணையும் இடத்தில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிக்னல்கள் நிறுவப்பட உள்ளன.இப்பணிகள், ஆறு மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.