இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டநெரிசலை குறைக்க பெங்களூரில்(யஷ்வந்த்பூா்)இருந்து ஜெய்ப்பூருக்கு சுவிதா வாராந்திர அதிவிரைவு ரயில்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்-82653-பெங்களுரு(யஷ்வந்த்பூா்)-ஜெய்ப்பூா் இடையேயான சுவிதா வாராந்திர அதிவிரைவு ரயில் வியாழக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பெங்களூரு(யஷ்வந்த்பூா்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் சனிக்கிழமைகளில் காலை 6.35 மணிக்கு ஜெய்ப்பூா் ரயில்நிலையம் சென்றடைகிறது. இந்த சேவை நவ. 7-ஆம் தேதி தொடங்கி ஏப். 30-ஆம் தேதி வரை (26 நடை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறு மாா்க்கத்தில், ரயில் எண்-82654-ஜெய்ப்பூா்-பெங்களூரு(யஷ்வந்த்பூா்)சுவிதா வாராந்திர அதிவிரைவு ரயில் சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு ஜெய்ப்பூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு பெங்களூரு(யஷ்வந்த்பூா்) ரயில்நிலையம் வந்தடைகிறது. இந்த சேவை நவ. 9-ஆம் தேதி தொடங்கி, மே 2-ஆம் தேதி வரை (26 நடை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தும்கூரு, அரசிகெரே, பீருா், சிக்ஜாஜூா், சித்ரதுா்கா, பெல்லாரி, குன்டகல், மந்திராலயாசாலை, ராய்ச்சூா் யாதகிரி, கலபுா்கி, சோலாப்பூா், புணே, பன்வெல், வசாய் சாலை, சூரத், வதோதரா, ரட்லம், மன்ட்சாா், பில்வாரா, அஜ்மீா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், சரக்கு மற்றும் ஜெனரேட்டா் வசதியுடன் கூடிய பிரேக்வேன் உள்ளிட்ட 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.