மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ஆன்மிகம், சுற்றுலா சிறப்பு ரயில்கள்

கோவை வழியாக, ஆன்மிகம், சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா இணை பொது மேலாளர் சேம் ஜோசப் மற்றும் மேலாளர் சுப்ரமணி ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ், 2005ம் ஆண்டு முதல் இதுவரை, 364 தனி ரயில்கள், நாட்டின் பல்வேறு ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன.

வரும், 12ம் தேதி மதுரையில் இருந்து திண்டுக்கல், ஈரோடு வழியாக, ராஜஸ்தானில் நாத் துவாரகை உட்பட பஞ்ச துவாரகைகள், குஜராத்தில் நிஷ்களங்க மகாதேவர் கடல் கோவில் என பல்வேறு தலங்களுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், நவ., 13ல், திருச்சியில் இருந்து புறப்படும் ரயில், சென்னை பெரம்பூர் வழியாக, மேற்கு வங்கம், அசாம் மாநிலம் கவுகாத்தி காமாக்ய சக்தி பீடம், வசிஷ்டர் ஆசிரமம், பிரம்மபுத்திரா நதியில் புனித தீர்த்தாடானம், ஷில்லாங் பீக் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது.

பயணியரிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், எதிர்காலத்தில், கோவை வழியாகவும் இச்சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து சுற்றுலா செல்வோர், ஈரோடு ஸ்டேஷனில் இருந்து புறப்படலாம். கட்டணம், பயண நாட்கள் உள்ளிட்ட விபரங்களுக்கு, 90031 40655, 90031 40680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை