மதுரை - செங்கோட்டை இடையே, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, செங்கோட்டை ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தின் சார்பில், தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தீபாவளி பண்டிகை, வரும், 27ம் தேதி, கொண்டாடப்படுகிறது. மதுரை - செங்கோட்டை; திருநெல்வேலி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்களில், சாதாரண நாட்களிலேயே கூட்டம் அதிகம் உள்ளது. தீபாவளி நேரத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும். ரயிலில் பயணியர் நெருக்கடி இன்றி பயணம் செய்ய வசதியாக, வரும், 15ம் தேதியில் இருந்து, 31ம் தேதி வரை, மதுரை - செங்கோட்டை; திருநெல்வேலி - செங்கோட்டை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.