ஐ.ஆர்.சி.டி.சி.,யின் தட்கல் ரயில் முன்பதிவிற்கான புதிய விதிமுறைகள்பண்டிகை காலங்களில் ஜெனரல் கோட்டாவில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில், தட்கல் ரயிலில் முன்பதிவு செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.

மத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் பெருமளவு மக்கள் ரயிலில் பயணிப்பதால், ஜெனரல் கோட்டாவில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், தட்கல் ரயில் முன்பதவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.,

1. பொதுவாக தட்கல் ரயிலுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓபன் செய்யப்படும் நிலையில், தற்போது அதற்கான நாட்களை குறைத்து ஒரு நாளுக்கு முன்னர் முன்பதிவுகள் தொடங்கப்படும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.,

2. ஒரு நாளுக்கு முன்னர் தொடங்கப்படும் தட்கல் ரயிலுக்கான முன்பதிவுகள், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணி அளவிலும், நான்-ஏசி வகுப்புகளுக்கு காலை 11 மணி அளவிலும் தொடங்கப்படும்.

3. தட்கல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்கள், ஓரோரு வகுப்புகளுக்கும் ஓர் குறிப்பிட்ட தொகையை கூடுதல் தொகையாக செலுத்த வேண்டும்.

அதாவது 2வது வகுப்பில் டிக்கெட் பதிவு செய்ய விரும்புபவர்கள் ரூ.15 கூடுதல் தொகையாக செலுத்த வேண்டும். இதே போல, ஸ்லீபர் வகுப்புகளுக்கு ரூ.90 முதல் ரூ.175 வரையும், ஏசி இருக்கைகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும்.

ஏசி 3 அடுக்கு டிக்கெட்டுகளுக்கு ரூ.250 முதல் ரூ.350 வரையும், ஏசி 2 அடுக்கு டிக்கெட்டுகளுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரையும் கூடுதல் தொகையாக செலுத்த வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி., யின் தட்கல் ரயில் முன்பதிவிற்கான விதிமுறைகள் :

1. தட்கல் ரயிலுக்கான முன்பதிவுகளை ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் மட்டுமல்லாது, இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு கவுண்டர்ஸ்,  ரயில்வே டிக்கெட் முன்பதிவு அலுவலகம் மற்றும் அங்கீகாரம் பெற்ற டிக்கெட் முன்பதிவு முகவர்கள் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

2. ஜெனரல் கோட்டா ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை போல தான் தட்கல் ரயிலுக்கான முன்பதிவுகளையும் செய்ய வேண்டும்.

3. ரயில்களின் பட்டியல் குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், வலதுபுறம், "ஜெனரல்" மற்றும் "தட்கல்" ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தட்கல் பிரிவை செலக்ட் செய்த பின் முன்பதிவை தொடங்கலாம்.

4. முன்பதிவு செய்யவிரும்பும் பயணிகள், தாங்கள் பதிவு செய்ய விரும்பும் வகுப்பு, இருக்கை எண், கட்டணம் போன்றவற்றை "செக் அவெய்லபிலிட்டி அண்ட் ஃபேர்" என்ற ஆப்ஷன்-ஐ கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்.

5. தட்கல் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகை, மகளிருக்கான சலுகை மற்றும் இதர சலுகைகளை பெற இயலாது.
புதியது பழையவை