மதுரை ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அக்டோபர் மாதங்களில் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்.


Image result for madurai railway division

நாகர்கோவிலில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்படும் 56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், அக்டோபர் 23, 25, 29 மற்றும் 30ம் தேதிகளில் கோவில்பட்டி - திண்டுக்கல் இடையே ரத்து.

கோவையிலிருந்து காலை 7:20 க்கு புறப்படும் 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், அக்டோபர் 23, 25, 29 மற்றும் 30ம் தேதிகளில் திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே ரத்து.

பாலக்காட்டில் அதிகாலை 4:10 மணிக்கு புறப்படும் 56769 பாலக்காடு - திருச்செந்துார் ரயில், அக்டோபர் 30ம் தேதி விருதுநகர் - திருநெல்வேலி இடையே ரத்து. மேலும் இந்த ரயில் அக்., 25, 29 தேதிகளில் மதுரை - திருநெல்வேலி இடையே ரத்து.

திருச்செந்துாரில் பகல் 11:40 மணிக்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் - பாலக்காடு ரயில், அக்டோபர் 30ம் தேதி திருநெல்வேலி- விருதுநகர் இடையே ரத்து. மேலும் இந்த ரயில்கள் அக்., 25, 29 தேதிகளில் திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து.

செங்கோட்டையில் பகல் 11:50க்கு புறப்படும், 56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில், அக்டோபர் 23 மற்றும் 25ம் தேதிகளில் விருதுநகர் - மதுரை இடையே ரத்து.

மதுரையில் மாலை 5மணிக்கு புறப்படும், 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், அக்டோபர் 23 மற்றும் 25ம் தேதிகளில் மதுரை - விருதுநகர் இடையே ரத்து.

காரைக்குடியில் காலை 9:50க்கு புறப்படும், 76840 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில், அக்டோபர் 23 மற்றும் 25ம் தேதிகளில் காலை 10:30க்கு புறப்படும்.

திருச்சியில் காலை 10:05க்கு புறப்படும், 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், அக்டோபர் 23 மற்றும் 25ம் தேதிகளில் காலை 10:30க்கு புறப்படும்.

மானாமதுரையில் பிற்பகல் 2மணிக்கு புறப்படும், 76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில், அக்டோபர் 23 மற்றும் 25ம் தேதிகளில் பிறப்பார்கள் 2:15க்கு புறப்படும்.

சென்னையில் எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் 16127 குருவாயூர் விரைவு ரயில், அக்டோபர் 23, 25, 29 மற்றும் 30ம் தேதிகளில் திருவானந்தபுர கோட்டத்திற்கு 105 நிமிடங்கள் காலதாமதமாக செல்லும். மேலும் 16129 தூத்துக்குடி இணைப்பு ரயில் தூத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் காலதாமதமாக சென்றடையும்.

மேற்கொண்ட தகவலை மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை