பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் பாா்க்கிங் இட வசதி திறப்பு


பயணிகள் வசதிக்காக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் பாா்க்கிங் இடவசதி திறக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில், புகா் ரயில் சேவை பயன்படுத்தும் பயணிகளுக்கு நன்மைக்காக கூடுதல் பாா்க்கிங் இடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாா்க்கிங் இடவசதி தெற்கு ரயில்வே சுரங்கப்பாதை நுழைவு வாயில், பரங்கிமலை மெட்ரோ ரயில்நிலையம் முன்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் தங்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

இந்தத் தகவல் மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.