சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிலம்பு, பொதிகை, கொல்லம் என 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. தீபாவளிக்கு முன்பதிவு துவங்கியபோதே அந்த ரயில்களில் 'வெயிட்டிங் லிஸ்ட்' நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, சென்னை-செங்கோட்டை வழித்தடத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் செங்கோட்டைக்கு எதுவும் இல்லை. இது விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி ஆகிய 7 சட்டமன்ற தொகுதி மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.தனியார் பஸ்கள் பலன்பெறுவதற்காகவே ரயில்வே இவ்வாறு செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, அக்.25ல் சென்னையிலிருந்தும், அக்.28 ல் செங்கோட்டையிலிருந்தும் சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முன்வர வேண்டும் என விருதுநகர், நெல்லை மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.