திருச்சி -- காரைக்குடி(மாலை 6:15 மணி) பாசஞ்சர் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்குடி இடையே (எண்: 76830- 76831) டெமோ பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் காரைக்குடி பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம் உயர்கல்விக்காக மானாமதுரை, சிவகங்கை, கல்லல் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் காரைக்குடிக்கும், திருச்சிக்கும் பஸ்களில் செல்கின்றனர். திருச்சி, காரைக்குடிக்கு போதிய பஸ்களின்றி உரிய நேரத்திற்குள் பல்கலை., கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் திருச்சி - காரைக்குடி வரை வரும் பாசஞ்சர் ரயிலை, மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நீட்டிக்கப்படும் பட்சத்தில் தேவகோட்டை ரஸ்தா, கல்லல், சிவகங்கை, மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர்.