பழநி அருகே கோதைமங்கலத்தில் ரயில்வே பாதையில் சிமென்ட் கல் வைத்த, 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.


Image result for palani railway station

கடந்த அக்.,12ல் பழநி ஸ்டேஷன் ரயில் பாதையில் கோதைமங்கலம் பகுதியில் பொறியாளர் ராஜேந்திரன் ரோந்து சென்ற போது தண்டவாளங்களுக்கு நடுவே சிமென்ட் கல் வைத்திருந்ததை பார்த்தார்.உடனடியாக அந்தக் கல் அகற்றப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து பழநி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையாளர் ஜெகநாதன் உத்தரவின்படி திண்டுக்கல் எஸ்..,செல்வராஜ், பழநி எஸ்.., பாலசுப்பிரமணியன் தனிப்படையினர் விசாரித்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக திரிந்த கோதைமங்கலம் பிரபாகரன் 37, சின்னத்துரை 27, மலையாளம் 37, ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள்தான் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்தது எனத் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


புதியது பழையவை