மழை எதிரொலி - வருகின்ற 25ம் தேதி வரை நீலகிரி மலை ரயில்வேயில் இயங்கும் அனைத்து சேவைகளும் ரத்து.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வியாழக்கிழமை தொடங்கியது. இதனால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் பகல், இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 25ம் தேதி வரை மேலும் சில ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு.
Image result for ooty train
  • மேட்டுப்பாளையத்தில் காலை 7:10க்கு புறப்படும், 56136 மேட்டுப்பாளையம் - ஊட்டி நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • குன்னூரில் காலை 7:45மணிக்கு புறப்படும், 56141 குன்னூர் - ஊட்டி நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • உதகையில் காலை 9:15மணிக்கு புறப்படும், 56139 ஊட்டி - குன்னூர் நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • உதகையில் பகல் 12:15மணிக்கு புறப்படும், 56142 ஊட்டி - குன்னூர் நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • உதகையில் பகல் 12:35மணிக்கு புறப்படும், 56143 ஊட்டி - குன்னூர் நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • உதகையில் மதியம் 2மணிக்கு புறப்படும், 56137 ஊட்டி - மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • குன்னூரில் மாலை 4மணிக்கு புறப்படும், 56138 குன்னூர் - ஊட்டி நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
  • உதகையில் மாலை 5:30மணிக்கு புறப்படும், 56140 ஊட்டி - குன்னூர் நீலகிரி மலை ரயில் அக்டோபர் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து.
புதியது பழையவை