அக்டோபர் 23ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்கள்சேவையில் மாற்றம்.காலை 9.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் ரயில் காட்டங்குளத்தூர் வரை மட்டுமே இயங்கும்.

காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும்.

காலை 10.08 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் காட்டாங்குளத்தூர் வரை மட்டுமே இயங்கும்.

காலை 10.56 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் செங்கல்பட்டு ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும்.

முற்பகல் 11.48 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் காட்டாங்குளத்தூர் வரை மட்டுமே இயங்கும்.

பகல் 12.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும்.

பகல் 14.30 மணிக்கு பின்னர் வழக்கமான சேவை வழங்கப்படும்.
புதியது பழையவை