செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணி - அக்டோபர் 20ம் தேதி வைகை, காச்சிக்குடா, காக்கிநாடா ரயில்களின் சேவையில் மாற்றம்.


சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக அக்டோபர் 20ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்டம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

சென்னை கடற்கரையில் காலை 8:28க்கு புறப்படும், 66023 சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் மின்தொடர் ரயில், தாம்பரம் - மேல்மருவத்தூர் இடையே ரத்து.

மேல்மருவத்தூரில் இருந்து மாலை 3:25க்கு புறப்படும்(செங்கல்பட்டில் இந்த ரயில் ரயில் மாலை 4:10க்கு புறப்படும்), 66024 மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை மின்தொடர் ரயில், மேல்மருவத்தூர் - தாம்பரம் இடையே ரத்து.
மதுரையில் இருந்து காலை 7மணிக்கு புறப்படும், 12636 மதுரை - சென்னை எழும்பூர் 'வைகை' அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே ரத்து.

சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1:40க்கு புறப்படும், 12635 சென்னை எழும்பூர் - மதுரை 'வைகை' அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து மாலை 3:20க்கு புறப்படும், 17651 செங்கல்பட்டு - காச்சிக்குடா விரைவு ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும், 17643 செங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.
மேல்மருவத்தூரில் இருந்து காலை 11:30க்கு புறப்படும், 66045 மேல்மருவத்தூர் - விழுப்புரம் மின்தொடர் ரயில், முழுமையாக ரத்து.

விழுப்புரத்தில் இருந்து பகல் 1:50க்கு புறப்படும், 66046 விழுப்புரம் - மேல்மருவத்தூர் மின்தொடர் ரயில், முழுமையாக ரத்து.