ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 206 கோடி ரூபாயில் புதிய ரயில் பாதை அமைக்க மண் ஆய்வுப் பணி நடந்தது.பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு 1914ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. 1964ல் புயலால் தனுஷ்கோடிக்கு ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 206 கோடி ரூபாயில் போக்குவரத்தை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து, மார்ச் 1 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மண் ஆய்வு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிய ரயில் பாதை அமைய உள்ளதால், கடலோர மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய, நேற்று ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தனுஷ்கோடியில் இரு இடத்தில் 70 அடி அழத்திற்கு போர்வெல் மூலம் துளையிட்டு மண் சேகரித்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பினர். தனுஷ்கோடியில் 16 கி.மீ.,துாரத்தில் 20 இடத்தில் துளையிட்டு மண் சேகரிக்க உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி - அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து பாம்பன் சென்ற ரயில்வே அதிகாரிகள் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர்பழுதடைந்த ரயில்வே பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்  அமைப்பதற்காக, அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன