அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

அரக்கோணம் - வேலூர் கண்டோன்மென்ட் இடையே 21ம் தேதி பிற்பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் ரயில், வேலூர் கண்டோன்மென்ட் - அரக்கோணம் இடையே 21ம் தேதி காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி தூரம் மட்டுமே செல்லும் ரயில்கள்

ஜோலார்பேட்டை - அரக்கோணம் இடையே 20ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் காட்பாடி - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்

கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் - தனாபூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், 20ம் தேதி காலை 9 மணிக்கு இயக்கப்படும் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

யஷ்வத்பூர் - கவுரா ஜங்ஷன் ட்ராண்டோ எக்ஸ்பிரஸ், 20ம் தேதி காலை 11 மணிக்கு இயக்கப்படும் ரயில் 2.10 மணி நேரம் தாமதமாகவும், பானஸ்வதி - பாட்னா ஜங்ஷன் கம்சேபர் எக்ஸ்பிரஸ், 20ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் 20 நிமிடம் தாமதமாகவும், கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 20ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் 15 நிமிடமும் தாமதமாக வந்தடையும்.

கவுரா ஜங்ஷன் - யஷ்வத்பூர் ட்ராண்டோ எக்ஸ்பிரஸ், 20ம் தேதி காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் மறுநாள் 2.10 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

கோவை ஜங்ஷன் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 21ம் தேதி காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் 10 நிமிடமும், சென்னை சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல் மேற்கு கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 21ம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.

சென்னை புறநகர் சேவை

மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் இடையே நாளை காலை 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி - எண்ணூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.